உப்பு நீர் மருத்துவம்
நம் உடலில் பல நோய்களுக்கும், மனதில் தோன்றும் பல குழப்பங்களுக்கும் பலபல காரணங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் NEGATIVE ENERGY / BLACK ENERGY. தமிழில் சொன்னால் இதை "எதிர் மறை சக்தி அலைகள் " எனலாம்.
நாம் தினமும் பல இடங்களுக்கு போகிறோம், பலரையும் சந்திக்கிறோம். அவர்கள் மூலம் அல்லது சில இடங்களில் கிடைக்கும் எதிர்மறை அலைகள் நம்மை தாக்குகின்றன. நம்மை சூழ்ந்து கொள்கிறன. அதன் தாக்கத்தால் நமது உள்ளமும் உடலும் பாதிக்கப்படுகின்றன.
சோர்வு, கை-கால் வலி, தூக்கக் குறைபாடு, மனதில் குழப்பம் என்று பல்வேறு விதமாய் பாதிக்கப்படுவோம்.
உடனே மாத்திரை போட்டுக் கொள்கிறோம். அல்லது மருத்துவரை நாடுகிறோம்.
சில நேரம் நம்மால் முடியாத போது எதிர்படுவோர் மீது எரிந்து விழுந்து BAD VIBRATION ஐ நாமும் உருவாக்கி பரப்புகிறோம்.
அதை மிக மிக எளிய முறையில் சரி செய்யலாம்.
ஆன்மீக ஹீலிங் முறையில் (SPIRITUAL HEALING) நம் வீட்டிலேயே நாமே எளிதாக செய்யலாம்.
இளஞ்சூடாக சூடு செய்யப்பட்ட வெந்நீரை ஒரு பக்கெட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் ஒரு கைப்பிடி அளவு (ஐந்து ஸ்பூன் அளவு) கல் உப்பு , ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், மூன்று ஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்க்க வேண்டும்.
நாம் வசதியாக ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு அந்த பக்கெட் நீரில் நம் இரு கால்களையும் மூழ்க வைக்க வேண்டும். நம் கணுக்காலுக்கு மேல் வரை கால்கள் முங்கி இருக்க வேண்டும்.
மனதில் உங்களுக்கு பிரியமான இறைவனை நினைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டும்.
இந்த நேரத்தில் உங்கள் மனதில் ஒரே எண்ணம்தான் இருக்க வேண்டும். அது உங்களின் கெட்ட அலைகள் (BAD ENERGY / BLACK ENERGY) உங்களின் முழு உடலிலிருந்தும் கால்கள் வழியாக உப்பு நீருக்குள் இறங்குவதாக கற்பனை செய்ய வேண்டும். எங்கள் எண்ணமே செயல்.
இப்படியே பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள் அமர்ந்திருக்க வேண்டும்.
பின்னர் கால்களை ஒரு துண்டால் துடைத்து விட்டு மறக்காமல் அந்த கெட்ட எனர்ஜி இறங்கியுள்ள நீரை கழிவறையில் கொண்டு சென்று ஊற்றி விடவேண்டும். வேறு எங்கும் ஊற்றி விடக் கூடாது.ஏனெனில் அது மோசமான தீங்கு விளைவிக்கும் நீராகும்.
பாக்கெட்டையும் நன்கு கழுவிய பின்தான் வேறு எதற்கும் உபயோகிக்க வேண்டும்.
இனி போய் படுங்கள். சுகமான உறக்கம் உங்களைத் தழுவும்.
செய்முறை வீடியோவை கீழுள்ள படத்தின் மேல் கிளிக் செய்து காணலாம்.
மேலும் விபரங்கள் தேவைப்படுவோர் இராணிப்பேட்டை அகுபங்சர் அகாடமியை தொடர்பு கொள்ளவும்.
கைபேசி எண் : 97900 99358
No comments:
Post a Comment